
கதிகலங்க வைக்கும் பேய்மழை ..தப்புமா மும்பை..!
மும்பையில் தொடர் கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக, மும்பை மாநகரமே கடும் மழையினால் சின்னா பின்னமானது.இந்நலையில் தற்போது மீண்டும் வலுத்து வருகிறது மழை.இதன் காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது\
இதனால் உள்ளூர் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல், 56 விமானங்கள் கோவா, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ரயில் சேவையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் துறைமுகம் செல்லும் ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. மேலும் உள்ளூர் சேவையிலும் குறைவான ரயில்களே இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளதால் அலுவலகம் செல்வதற்கும் முடியாமல்,ஆங்காங்கு மக்கள் முடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது