
செல்போன் நிறுவனங்களின் சேவை கட்டணம் பாதியாக குறைத்து டிராய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ஒரு செல்போன் சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர், மற்றொரு செல்போன் நிறுவன வாடிக்கையாளரை அழைக்கும்போது அந்த நிறுவனத்துக்கு முதல் நிறுவனம் தர வேண்டிய கட்டணம் டெர்மினேஷன் சார்ஜ் (அ) அழைப்பு முடிவு கட்டணமாகும்.
இதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வரைமுறை செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 14 பைசா என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த இணைப்பு கட்டணத்தை 6 பைசா என்ற அளவுக்கு டிராய் குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய இணைப்பு கட்டணம், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் டிராய் கூறியுள்ளது.
டிராய்-ன் இந்த முடிவால், வாடிக்கையாளர்களின் கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது செல்போன் இணைப்பு கட்டணம் குறைந்துள்ளதால், செல்போன் கட்டணமும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.