92% அதிகரித்த இந்திய ரயில்வேயின் வருவாய்… ரூ.17,394 கோடியில் இருந்து ரூ.33,476 கோடியாக அதிகரிப்பு!!

By Narendran SFirst Published Oct 11, 2022, 7:09 PM IST
Highlights

இந்திய ரயில்வேயின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஓப்பிடுகையில் 92 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய ரயில்வேயின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஓப்பிடுகையில் 92 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ. 33,476 கோடி. இது கடந்த ஆண்டு ஈட்டிய ரூ.17,394 கோடியுடன் ஒப்பிடுகையில் 92 சதவீதம் அதிகமாகும். முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 42.89 கோடியாக உள்ளது.

இதையும் படிங்க: ரயிலில் வழங்கப்பட்ட சமோசாவில் கிடந்தது இதுவா ? கொந்தளித்த நெட்டிசன்கள் - பதறிய IRCTC

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 34.56 கோடியாக இருந்தது, இது 24 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரையிலான காலக்கட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய் ரூ.26,961 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.16,307 கோடியாக இருந்தது. இது 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது: இறுதி அஞ்சலி செலுத்திய தலைவர்கள் விவரம்?

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 268.56 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 90.57 கோடியாக இருந்தது. இது 197 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து ஈட்டிய வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1086 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.6515 கோடியாக உள்ளது. இது 500 சதவீதம் அதிகரித்துள்ளது. 

click me!