"4 லட்சம் மரங்கள், 319 கோடி A4 பேப்பர் சேமிப்பு" - ரயில்வேதுறை சாதனை

 
Published : Jul 07, 2017, 04:58 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"4 லட்சம் மரங்கள், 319 கோடி A4 பேப்பர் சேமிப்பு" - ரயில்வேதுறை சாதனை

சுருக்கம்

Railway online recruitment tests save 319 crore A4 size sheets

ரெயில்வே துறை ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தியதால், ஏறக்குறைய 319 ஏ.4சைஸ் பேப்பர், 4 லட்சம் மரங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, பல மொழிகள் கொண்ட புத்தகம் மாதிரியான கேள்வித்தாள் மூலமே தேர்வுகள் நடக்கும். தேர்வு நடத்தி, வேலைக்கு ஊழியர்ளை எடுப்பதற்கு கோடிக்கணக்கான காகிதம் வீணாகும்.

இதை தவிர்க்கும் வகையில் சமீபத்தில் ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டது.  ரெயில்வே துறையில் உள்ள 14 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்காக சமீபத்தில் 3 கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் எழுத்துத்தேர்வு, மனநிலைதேர்வு, டைப் செய்தல் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.

இந்த தேர்வுகள் மூலம், ரெயில்வே துறைக்கு 319 கோடி ஏ.4சைஸ் பேப்பர் பயன்பாடு குறைக்கப்பட்டது, பேப்பர் உற்பத்திக்காக 4 லட்சம் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டது.

இதில் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில்,ரெயில்வே 315 மையங்களில் ஆன்-லைன் முறையில் தேர்வுகளை நடத்தியது. இதில் 92 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதனிலைத் தேர்வுக்கு 2.73 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு கடந்த ஜனவரி 17 மற்றும் 19-ந்தேதிகளில் ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

ஏறக்குறைய 45 ஆயிரம் பேர், 3-வது மற்றும் இறுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.  அவர்களுக்கு உளவியல், டைப்பிங் தேர்வு ஆகியவை கடந்த மாதம் 29, 30ந் தேதிகளில் நடந்தது.

அனைத்துத் தேர்வுகள் டிஜிட்டல்முறையில் நடத்தப்பட்டதால், ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது.

இதுவே பழைய முறைப்படி நடத்தப்பட்டு இருந்தால், 2 மாதங்கள் காலம் எடுத்து இருக்கும்.  ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் நேரமும், காகிதமும் சேமிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் வௌிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது.

ரெயில்வே தேர்வுகளில் கேள்வித்தாள் வௌியாகி சர்ச்சை உருவானதையடுத்து, கேள்வித்தாள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளை ரத்து செய்து, ஆன்-லைன் மூலம் தேர்வுகளைரெயில்வே நடத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!