நல்ல காலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது…ராகுல் என்ன சொல்கிறார் ?

First Published Jan 12, 2017, 5:37 AM IST
Highlights

நல்ல காலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது…ராகுல் என்ன சொல்கிறார் ?

கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுக்களை ஒழிப்பதாகக் கூறி ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நாட்டின் முக்கிய அமைப்புகளை மோடி பலவீனமாக்கிவிட்டார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நல்ல காலம் பிறக்கும் என தெரிவித்தார்.

மோடி  அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும்பாலான மக்களை தொடர்ந்து சிரமப்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

மத்திய அரசின் அறிவுரையின் பேரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ரிசர்வ் வங்கியே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததா? என்பது குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பாராளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்து உள்ளது.

இது பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மோடி அரசின் தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி,  பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய வரலாற்றில் மோசமான முடிவாகும் என குற்றம்சாட்டினார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவை பிரதமர் மோடி தன்னிச்சையாக எடுத்தார். இதன்மூலம் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் ரிசர்வ் வங்கி போன்ற அரசு அமைப்புகளை பலவீனப்படுத்திவிட்டார் என்று ராகுல் தெரிவித்தார்.

மோடியின் இந்த நடவடிக்கையால்  வருகிற 2019-ம் ஆண்டு நடடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். நல்ல காலம் எப்போது வரும் என மக்கள் கேட்கிறார்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நல்ல காலம் பிறக்கும் என ராகுல் உறுதிபடத் தெரிவித்தார்.

click me!