Rahul: Bharat Jodo Yatra:பாரத் ஜோடோ நடை பயணம்: ராகுல் காந்தி 1000 கி.மீ தொலைவை எட்டினார்

By Pothy RajFirst Published Oct 15, 2022, 1:04 PM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணம் இன்று 1,000 கி.மீ தொலைவை எட்டியுள்ளது. இதையொட்டி பெல்லாரி நகரில் பொதுக்கூட்டத்தில் பிற்பகலில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணம் இன்று 1,000 கி.மீ தொலைவை எட்டியுள்ளது. இதையொட்டி பெல்லாரி நகரில் பொதுக்கூட்டத்தில் பிற்பகலில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தை கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,500கி.மீ தொலைவுக்கும் அதிகமாக நடக்க உள்ளார். 

ராகுல் காந்தியுடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்த காங்கிரஸ் தலைவர்கள்: வைரல் வீடியோ

தமிழகத்தைக் கடந்து, கேரள மாநிலத்தில் 18 நாட்களுக்கும் மேலாகச் சென்று தற்போது ராகுல் காந்தி நடைபயணம் கர்நாடக மாநிலத்துக்குள் சென்று ஏறக்குறைய 34 நாட்களை எட்டியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி நுழைந்தார் நடைபயணம் ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார். வரும் 20ம் தேதி கர்நாடகத்தை விட்டு ராகுல் காந்தி நடைபயணத்தில் வெளியேறுகிறார். அப்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் 511 கி.மீ தொலைவு நடந்திருப்பார்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பெல்லாரி நகரில் இன்று நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் பெருகிறது.

ராகுல்ஜி! முதலில் 'காங்கிரஸ் ஜோடோ யாத்திரை' நடத்துங்கள்: உ.பி. பாஜக தலைவர் கிண்டல்

வெள்ளிக்கிழமை இரவு ஹலாகுந்தி மாத்தில் தங்கிய ராகுல் காந்தி இன்று காலை முதல் நடந்து, கம்மா பவனை அடைந்தார். பெல்லாரியில் இன்று பிற்பகலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன், ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல், முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, கமல் நாத், செல்ஜா குமார், ரன்தீப் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

2010ம்ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது பெல்லாரி தொகுதி என்பது ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி சகோதரர்களின் கோட்டையாக இருந்தது.இதை உடைக்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையா 320 கி.மீ நடைபயணம் மேற்கொண்டார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி...! தாய்க்கு ஷூ லேஸ் மாட்டி விட்ட ராகுல்.. வைரலாகும் வீடியோ

இந்த நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது, எடியூரப்பா அடுத்த தேர்தலில் ஆட்சியை இழந்தார், மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆதலால் பெல்லாரியில் நடக்கும்  பொதுக்கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமையும் என அந்த கட்சி நிர்வாகிகளால் நம்பப்படுகிறது

click me!