முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி… பிரதமரின் அறிவிப்புக்கு ராகுல்காந்தி வரவேற்பு!!

Published : Dec 26, 2021, 06:03 PM IST
முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி… பிரதமரின் அறிவிப்புக்கு ராகுல்காந்தி வரவேற்பு!!

சுருக்கம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் நேற்று அனுமதி வழங்கியுள்ளார். 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டுக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், நிபந்தனைகளுடன் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரைத்தது. கொரோனா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மற்றொரு நிபுணர் குழு மதிப்பீடு செய்தது. அதன்பிறகு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கேட்டு பெற்றார். அதைத்தொடர்ந்து 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்றவற்றை கடைபிடிப்பதே நாம் பாதுகாப்பாக இருக்க வழி. இதனை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நாடு முழுவதும் 18 லட்சம் படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் தயாராக உள்ளன. ஒமைக்ரான் பரவலை நினைத்து யாரும் பீதியடைய வேண்டாம்.

ஒமைக்ரானை எதிர்த்து போராட அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. குழந்தைகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் 90 ஆயிரம் படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதேபோல் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்தாக கூறிய ராகுல்காந்தி, பூஸ்டர் தடுப்பூசி மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், தனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan Update: விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்? 24-வது தவணை எப்போது? இதோ அப்டேட்
8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் செய்யப்போகும் மாயம்?! சம்பளம், பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும்? முழு விவரம்