பீகாரில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி… ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் நிதிஷ்குமார்!!

By Narendran SFirst Published Dec 26, 2021, 4:17 PM IST
Highlights

பீகார் மாநிலத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 

பீகார் மாநிலத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பீஹார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் நூடுல்ஸ் தயாரிக்கும்  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,  சுமார் 10 மணியளவில் எதிர்பாராத விதமாக  அங்கிருந்த கொதிகலன்  வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்  அருகிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தொழிற்சாலைக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொதிகலன் வெடித்தபோது ஏற்பட்ட சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவிலை என்று முசாஃபர்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்துள்ள காவல் துறையினர், விபத்துகான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக முதன்மை கொதிகலன் ஆய்வாளர் கே.பி.சிங் கூறுகையில், கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொதிகலன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த ஒரு கிலோமீட்டர் மீட்டர் தொலைவிற்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது என்று தெரிவித்தார்.

click me!