
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள்,பிரெய்லி டைப்ரைட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளது மோடி அரசின் உணர்ச்சியற்ற நிலையையே காட்டுகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 சதவீதமாக உயர்வு
நாடுமுழுவதும் கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜி.எஸ்.டி.) மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கரநாற்காலிகள்,பிரெய்லி டைப்ரைட்டர்கள், பேப்பர்கள், உள்ளிட்ட பலவகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து, 12 மற்றும் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உணர்வற்ற அரசு
இது குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திடுவிட்டரில் நேற்று கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் வௌியிட்ட பதிவில் “ சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினரான மாற்றித்திறனாளிகள் மீது மோடி அரசு முற்றிலும் உணர்வற்று, அக்கறை இன்றி இருப்பதை மீண்டும் நிரூப்பித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி.வரியில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த 5 சதவீத வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரெய்லி டைப்ரைட்டர்கள், பேப்பர்களுக்கு, காதுகேட்கும் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு 12 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது,
திரும்பப் பெற வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.
இந்த வரியால் நாட்டில் உள்ள லட்சக்கணக்காண மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.
ஜி.எஸ்.டி. வரியை அவசரமாக மோடி அரசு அமல்படுத்தி கொண்டாடியுள்ளது ’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சக்கர நாற்காலிகள், பிரெய்லி பேப்பர்ளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி குறித்து காங்கிரஸ் கட்சிடுவிட்டரில் படங்களையும் வௌியிட்டுள்ளது