பொதுமக்களுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற ராகுல் - ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

First Published Nov 12, 2016, 7:43 AM IST
Highlights


500 மற்றும் 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததையடுத்து பொதுமக்கள் நேற்று முதல் வங்கிகளில் தங்களது பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று செல்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 4000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள எஸ்.பி.ஐ.வங்கியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றார்.

புதிய ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்த ராகுல்காந்தி வரிசையிலேயே நின்று சென்று 4000 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றார். வங்கியில் நின்ற ராகுலுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி,

500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் இன்னல்களை கேட்டறிந்ததாகவும், மக்கள் பிரச்சனையில் தானும் பங்கேற்க விரும்புவதாகவும் மக்கள் கஷ்டப்படும் போது தானும் துன்பத்தை அனுபவிக்க தயார் என தெரிவித்தார்.

மேலும், கறுப்புபணத்தை வெளிக்கொண்டு வரவே 500, 1000 ரூபாய் செல்லாது என மோடி அறிவித்தார். ஆனால், கறுப்புபணத்தை வைத்திருப்பவர்கள் யாரும் வங்கி வாசலில் நிற்கவில்லை என்றும், ஏழைகளே வங்கியில் நின்று சிரமப்படுகின்றனர் என்றும் மக்கள் துன்பப்படுவதைத்தான் மோடி அரசு நிர்பந்திக்கிறதா என ஆவேசமாக தெரிவித்தார்.

click me!