"அடேங்கப்பா....! ஒரே நாளில் ரூ. 53 ஆயிரம் கோடி கலெக்சன்...!!!" - SBI-ன் புதிய அறிவிப்பால் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 06:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
"அடேங்கப்பா....! ஒரே நாளில் ரூ. 53 ஆயிரம் கோடி கலெக்சன்...!!!" - SBI-ன் புதிய அறிவிப்பால் பரபரப்பு

சுருக்கம்

1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியான 24 மணிநேரத்தில், ரூ. 53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் கருப்பு பணத்தையும், போலி ரூபாய் நோட்டுக்களையும் ஒழிக்கும் நோக்கில், புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார்.

இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000, ரூ.100, நோட்டுக்கள் நேற்று முன் தினம் முதல், வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நாடுமுழுவதும் அனைத்து வங்கிகள், தபால்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த சூழலில் இன்று முதல் ஏ.டி.எம். மையங்களில் இருந்து மக்கள் பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்பாடின்றி உள்ளதால், பணம் எடுக்கச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். ஒரு சில ஏ.டி.எம்.கள் மட்டுமே இயங்குவதால், அங்கும் பணம் வைக்கப்பட்ட சில மணிநேரத்தில் அனைத்துப்பணமும் தீர்ந்து விட்டது.

இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அந்த வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம், வங்கிகளில் போதுமான பணம் இருப்பு இருப்பதால், மக்கள் தங்கள் கைகிகளில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். பணம் தீர்ந்துவிடும் என அச்சப்படத்தேவையில்லை எனவும் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: OROP வருமா? அரசு ஊழியர்களின் பென்ஷன் பாகுபாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?
8th Pay Commission: இந்த ஒரு முடிவு எடுத்தா போதும்... ரூ.29 லட்சம் வரை கூடுதல் சம்பளம்?! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!