"கோஹினூர் வைரத்தை எப்போ மீட்க போறீங்க?" - மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 05:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
"கோஹினூர் வைரத்தை எப்போ மீட்க போறீங்க?" - மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுருக்கம்

பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருடப்பட்டு, தற்போது பிரிட்டன் வசம் உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஏற்கனவே ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. 1849 ம் ஆண்டு, சீக்கிய போரில் உதவியதற்காக மகாராஜா ரஞ்சித் சிங்கால் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அதனை பலவந்தமாக கேட்க முடியாது என பதிலளித்திருந்தது. அரசின் இந்த பதிலை ஏற்க மறுத்து, தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்‍கு வந்தபோது, கோஹினூர் வைரத்தை மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் பதிலளி்க்க வேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!
மீண்டும் ஒரு "லாக்டவுன்"! சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்கள்.! உலகையே பதற வைக்கும் அமெரிக்கா