“இனி டி.வி.சேனல்களுக்கு லைசென்ஸ் ரினிவல் இல்லை” – மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 03:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
“இனி டி.வி.சேனல்களுக்கு லைசென்ஸ் ரினிவல் இல்லை” – மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

பொருளாதார நிபுணர்கள் மாநாடு-2016 டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு,

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதா காசில்லை என்றும், அதனை டிசம்பர் 3௦ ம் தேதி வரை மாற்றி கொள்ளலாம். இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டது என்றும், நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் எந்தவித பிரச்னையின்றி பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை.  இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவல்ல, நீண்ட நாட்களாக ஆலோசித்து செய்து பின்னர் எடுக்கப்பட்டதாகும். இதனை ஒரு சிலர் தவிர அனைவரும் வரவேற்கின்றனர் என தெரிவித்தார்.

மேலும், தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ரூபாய் நோட்டுகளின் மாற்றத்தால் மக்கள் படும் சிரமங்களை ஒளிபரப்புவதில் தவறில்லை என்றும் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் ஒரு "லாக்டவுன்"! சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்கள்.! உலகையே பதற வைக்கும் அமெரிக்கா
சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு