பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று டெலிவரி ஊழியர்களுடன் தோசை சாப்பிட்ட ராகுல் காந்தி!

By SG BalanFirst Published May 8, 2023, 8:23 AM IST
Highlights

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ஹோட்டலை அடைய சுமார் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரில் சென்றார். பின் டெலிவரி ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார்.

கர்நாடக தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன நிலையில், வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் தீவிர பிரச்சாரம் செய்துவரும் சூழலில், ​​ராகுல் காந்தி அங்கு ஒரு டெலிவரி ஏஜெண்டின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சவாரி செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ஏர்லைன்ஸ் ஹோட்டலில், டுன்சோ, ஸ்விக்கி, ஜொமாடோ, பிளிங்கிட் போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஏஜெண்டுகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அந்த வீடியோவை காங்கிரஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ராகுல் காந்தி காபி மற்றும் மசால் தோசையுடன் டெலிவரி தொழிலாளர்களுடன் உரையாடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. அப்போது அவர்களின் பணி நிலைமைகள் குறித்தும், பணிபுரியும் போது அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

மணிப்பூரில் இருப்பவர்களை மீட்க மாநில அரசுக்கு நடவடிக்கை; சிறப்பு விமானங்கள் ஏற்பாடு

. ji had a candid conversation with gig workers and delivery partners of Dunzo, Swiggy, Zomato, Blinkit etc at the iconic Airlines Hotel in Bengaluru, today.

Over a cup of coffee and masala dosa, they discussed the lives of delivery workers, lack of stable employment… pic.twitter.com/qYjY7L03sh

— Congress (@INCIndia)

பின்னர், அவர் டெலிவரி தொழிலாளர் ஒருவரின் ஸ்கூட்டரில் சவாரி செய்தார். ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்கும் அவர் நீல நிற ஹெல்மெட் அணிந்திருப்பதைக் காணலாம். சுமார் இரண்டு கிமீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்ராவைத் தொடங்கியதில் இருந்து, பொதுக் கூட்டங்களில் பேசச் செல்லும் இடங்களில் தனிப்பட்ட முறையில் பொது மக்களை சந்திப்பதை ராகுல் காந்தி வழக்கம் ஆக்கிக்கொண்டிருக்கிறார். கடந்த மாதம், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பழைய டெல்லி சந்தைக்கு சென்று, அப்பகுதியின் பிரபலமான உணவகங்களில் உண்டு மகிழ்ந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ராகுல் காந்தி தில்லி பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குச் சென்று மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். அங்கேயே மாணவர்களுடன் மதிய உணவும் சாப்பிட்டார்.

கர்நாடக தேர்தல் 2023: சோனியா காந்தி பேசிய பேச்சு! ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வச்சு செய்யும் பாஜகவினர்!

click me!