Bharat Jodo Yatra suspended: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா திடீர் நிறுத்தம்: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Jan 27, 2023, 2:53 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீரில் சென்று வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று ஜம்முவின் குவாஸிகந்த் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் சென்று வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று ஜம்முவின் குவாஸிகந்த் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

ராகுல் காந்தி சாலையில் நடந்து வரும் போது கூட்டத்தினரை சரிவர போலீஸார் ஒழுங்குபடுத்தி பராமரிக்காமல் இருந்தனர், பாதுகாப்பு குளறுபடிகளும் இருந்ததால் உடனடியாக யாத்ரா நிறுத்தப்பட்டது. 

சிந்து நதி ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜினி பாட்டீல் கூறுகையில் “ ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாரத் ஜோடோ நடைபயணத்தில்  உரிய பாதுகாப்புவழங்க தோல்வி அடைந்துவிட்டது. பாதுகாப்பு குளறுபடிகள் இருந்தன, முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. 

ராகுல் காந்தியைப் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள், கூட்டம் சேர்கிறது. ஆனால் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்த போலீஸார் போதுமான அளவில் இல்லை. ராகுல் காந்திக்கு நெருக்கமாக பொதுமக்கள் வருகிறார்கள். ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் வைக்க வேண்டிய போலீஸார் இல்லை. 

பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக யாத்திரை ரத்து செய்யப்பட்டது இதனால் குவாஸிகுந்த் பகுதியில் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி இன்று 11கி.மீ தொலைவு நடக்கத் திட்டமிட்டிருந்தார், ஆனால், வெறும் 500 மீட்டர் மட்டுமே நடக்க முடிந்தது. ” எனத் தெரிவித்தார்

அதானி குழுமத்துக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி SEBI,RBI விசாரணை தேவை

குவாஸிகுந்த் பகுதியை ராகுல் காந்தி இன்று அடைந்தபின், தெற்கு காஷ்மீரின் வெசு பகுதியை நோக்கி நடக்க முடிவு செய்திருந்தார். ஆனால், போலீஸார் பராமரிக்க வேண்டிய பாதுகாப்பு வளையம் இல்லை, பாதுகாப்பு குளறுபடிகள் அதிகம் இருந்ததை காங்கிரஸ்நிர்வாகிகள் அறிந்தனர், இதையடுத்து, உடனடியாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

ராகுல் காந்தி இன்று 11கி.மீ தொலைவு நடக்கத் திட்டமிட்டிருந்தார், ஆனால், வெறும் 500 மீட்டர் மட்டுமே நடக்க முடிந்தது. 
 

click me!