கடந்த 1960ம் ஆண்டில் செய்யப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் அரசு ஒத்துழைப்பு அளிக்காததையடுத்து, அதில் திருத்தம் செய்யக் கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 1960ம் ஆண்டில் செய்யப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் அரசு ஒத்துழைப்பு அளிக்காததையடுத்து, அதில் திருத்தம் செய்யக் கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த நோட்டீஸை கடந்த 25ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா உயர் அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இந்தியா ஒப்போதும் உறுதியாக இருக்கும்,அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து வருகிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தினர்.
அதானி குழுமத்துக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி SEBI,RBI விசாரணை தேவை
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது சிந்து நதி நீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்ள கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர்19ம் தேதி இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்தன. இதன்படி, அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு,பாகிஸ்தான் அதிபர் முகமது அயூக் கான் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து நதியின் மேற்கு முகத்தில் பாயும் கிளை ஆறுகளை பாகிஸ்தானும், கிழக்கு முகத்தில் பாயும் பியாஸ், சட்லஜ், ராவி ஆறுகளை இந்தியாவும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை கண்காணிக்க 3வது சாட்சியாக உலக வங்கி கையொப்பமிட்டது.
இந்த சிந்து நதிநீர் பங்கீட்டை கண்காணிக்க இந்தியா,பாகிஸ்தான் சேர்ந்து சிந்து நதிநீர் ஆணையத்தை உருவாக்கின.அதற்கு இரு நாடுகள் சார்பிலும்ஆணையர் நியமிக்கப்பட்டிருந்தார்
மாணவர்களுடன் பிரதமர் மோடி பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் இன்று கலந்துரையாடல்
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இல்லை, ஒத்துழைப்பு தரவி்ல்லை என்பதால், அதில் மாற்றம் செய்யக் கோரி இந்தியா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியத் த ரப்பில் கூறுகையில் “ பாகிஸ்தானின் செயல்பாடுகள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கிறது. அந்த ஒப்தந்ததை செயல்படுத்துவதிலும் ஒத்துழைப்பு இல்லை என்பதால்தான் இந்தியா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்தியா சார்பில் கிஷ்கேன்கங்கா மற்றும் ராடல் நீர் மின் திட்டத்தை ஆய்வு செய்யயக் கோரி கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் ஒருவரை நியமிக்க கோரியது. ஆனால், இதை இந்தியாவிடம் கேட்காமல் தன்னிச்சையாக பாகிஸ்தான் கோரியது. இதையடுத்து, இந்தியாவும் தனிப்பட்ட முறையில் நடுநிலையான ஒருவரை நியமித்து ஆய்வு செய்யக் கோரி சர்வதேச தீர்ப்பாயத்தில் மனு அளித்தது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படம் ஒளிபரப்பு:ஏபிவிபி பதிலடி
இந்தவிவகாரத்தில் இணக்கமான தீர்வை எட்ட கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை இந்தியா முயற்சி செய்தும், 5 முறை கூட்டங்கள் நடத்தியும் பாகிஸ்தான் ஒத்துழைப்பு தரவில்லை. பாகிஸ்தானின் தொடர்ச்சியான வலியுறத்தலைத் தொடர்ந்து சமீபத்தில் நடுநிலையான நிபுணரை நியமித்து ஆய்வு செய்ய உலக வங்கி நடவடிக்கை எடுத்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை விதிகளை பாகிஸ்தான் மீறியதையடுத்து, இந்த நோட்டீஸ் வழங்க இந்தியா முன்னெடுத்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன