என்னை மீறி தொண்டர்கள் மீது கை வையுங்கள் பார்ப்போம்.. இந்திரா காந்தியாக மாறிய பிரியங்கா.. வைரலாகும் புகைப்படம்

By vinoth kumarFirst Published Oct 4, 2020, 5:47 PM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய போது திடீரென காரில் இருந்து இறங்கிய பிரியங்கா காந்தி என்னை மீறி இவர்கள் கை வையுங்கள் பார்ப்போம் என்ற போலீசாரின் லத்தியை பிடித்துதள்ளி ஆவேசம் காட்டினார்.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய போது திடீரென காரில் இருந்து இறங்கிய பிரியங்கா காந்தி என்னை மீறி இவர்கள் கை வையுங்கள் பார்ப்போம் என்ற போலீசாரின் லத்தியை பிடித்துதள்ளி ஆவேசம் காட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட காமக்கொடூரன்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போராட்டமும் வெடித்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். பின்னர் இருவரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதற்கிடையே நேற்று ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க டெல்லியில் இருந்து காரில் புறப்பட்டனர். அவர்களுடன் நூற்றுகணக்கான தொண்டர்களும் வாகனங்களில் கிளம்பினர். 

ஆனால், திடீர் திருப்பமாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காரை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை அனுமதிக்கவில்லை.
 இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி காங்கிரஸ் தொண்டர்களை விரட்டினர். என்னை மீறி இவர்கள் கை வையுங்கள் பார்ப்போம் என்ற போலீசாரின் லத்தியை பிடித்துதள்ளி ஆவேசம் காட்டினார். இதனால் மிரண்டபோலீசார் யாரையும் எதையும் செய்யவில்லை. கொஞ்சம் நேர சலசலப்புக்கு பின்னர் அங்கிருந்து காரில் பிரியங்கா காந்தி ராகுலுடன் புறப்பட்டு சென்றார். 

இதனையடுத்து, ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு, நீதி கிடைக்க இறுதி வரை போராடுவோம் என்றார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர். கதறி அழுத போது. கட்டித்தழுவி அரவணைத்து பிரியங்கா காந்தி ஆறுதல் கோரினார். ராகுல் காந்தி, மண்டியிட்டு அமர்ந்து என்ன நடந்தது என்பதை பொறுமையாக கேட்டு தைரியமாக இருக்கும்படி கூறினார். இதன்பின்னர் பிரியங்கா காந்தி பேசும் போது, குடும்பத்தினர் தங்கள் மகளை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும். நீதி வழங்கப்படும் வரை, இந்த போராட்டத்தை நாங்கள் தொடருவோம் என்றார். 

இதற்கிடையே பிரியங்கா காந்தி கட்டித்தழுவி அரவணைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில வைரலாகி வருகிறது. பிரியங்காவின் செயலில், உருவத்தில் இந்திரா காந்தி தெரிகிறார் என காங்கிரஸ் தொண்டர்கள் பலர் நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். பிரியங்காவின் நேற்றைய அதிரடி அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

click me!