ராகுல் காந்தியைக் காணவில்லை... கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு!!

First Published Aug 8, 2017, 3:20 PM IST
Highlights
Rahul Gandhi Missing Posters Emerge in Amethi


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதிக்கு கடந்த 6 மாதங்களாக தொகுதியின் எம்.பி.யும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தி செல்லாததையடுத்து, ராகுல் காந்தியை காணவில்லை, அவரைக் கண்டுபிடித்து தருவோருக்கு பரிசு என  ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் இருந்து ராகுல் காந்தி 3 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த முறை கடந்த 6 மாதங்களில் ஒரு முறை கூட வரவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ராகுல்காந்தியின் புகைப்படம் ஒட்டப்பட்டு, கடந்த 6 மாதங்களாக காணவில்லை, கண்டுபிடித்து தருவோருக்கு பரிசு என எழுதப்பட்டுள்ளது. ஆனால், யார் இந்தபோஸ்டரை ஒட்டினார் என்பது குறித்த முகவரி இதில் இல்லை. 

ராகுல் காந்தி  தொகுதிக்கு வராததைக் கண்டித்து இது முதல்முறையாக இது போல்போஸ்டர் ஒட்டப்படவில்லை. இதற்கு முன் கடந்த 2015ம் ஆண்டு இதேபோலபோஸ்டர் ஒட்டப்பட்டு, ராகுல் காந்தியை கண்டுபிடித்தால் பரிசு என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கடந்த 2015ம் ஆண்டு, அமேதி தொகுதியைச் சேர்ந்த ஒருவர் ராகுல் காந்தியை காணவில்லை என்று போலீசில் புகார் செய்து இருந்தார். 

அமேதி தொகுதிக்கு கடந்த 6 மாதங்களாக ஒரு முறை கூட அந்த தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி ஒருமுறை சென்று மக்களைச் சந்திக்காததால், அந்த தொகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகவும், தொகுதி மக்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்கிறார் என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுதியின் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மிகவும் மெதுவாக நடந்துவருவதாகவும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், இந்த போஸ்டர் பா.ஜனதாவும், மற்ற எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தான்போஸ்டர்களை ஒட்டி இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த போஸ்டர்கள் பெரும்பாலும் கவுரிகாஞ்ச் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததில் இருந்து ராகுல் காந்தி மனம் வெறுத்து தொகுதிக்கு பக்கம் வர மறுக்கிறார் என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

click me!