தொப்புள்கொடி உறவை மறக்காத ராகுல்காந்தி... பிரசவம் பார்த்த நர்சுடன் நெகிழ்ச்சி சந்திப்பு...!

Published : Jun 09, 2019, 03:38 PM IST
தொப்புள்கொடி உறவை மறக்காத ராகுல்காந்தி... பிரசவம் பார்த்த நர்சுடன் நெகிழ்ச்சி சந்திப்பு...!

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிறந்த பொழுது உடனிருந்து மருத்துவ உதவி செய்த நர்ஸ் ராஜம்மாவை இன்று சந்தித்து அரவணைத்துக் கொண்டு பழைய நினைவுகள் குறித்து பேசினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிறந்த பொழுது உடனிருந்து மருத்துவ உதவி செய்த நர்ஸ் ராஜம்மாவை இன்று சந்தித்து அரவணைத்துக் கொண்டு பழைய நினைவுகள் குறித்து பேசினார். 

மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த இரு நாட்களாக ராகுல் காந்தி இங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று 3-வது நாளாக கேரளாவின் கோழிக்கோடு நகரில் தனது கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார்.  திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்தபடியே சென்ற அவருக்கு வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

பின்னர், சோனியா காந்தியின் தலைப்பிரசவத்தின்போது நர்சாக இருந்து உதவிய செவிலியர் ராஜம்மா என்பவர் பணி ஓய்வுக்கு பின்னர் கோழிக்கோட்டில் இருப்பதை அறிந்த ராகுல் காந்தி அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதைதொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி, தனக்கு பிரசவம் பார்த்த ராஜம்மாவை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ராகுல் தன்னை அரவணைத்ததைக் கண்டு ராஜம்மா மகிழ்ச்சியில் நெகிழ்ந்துபோனார். ராகுல் காந்தி தனது 3-வது நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"