ரூ.10 ஆயிரத்திற்காக 2 வயது சிறுமி கொடூர கொலை... இந்தியா முழுவதும் கொந்தளிப்பு..!

Published : Jun 07, 2019, 05:50 PM ISTUpdated : Jun 07, 2019, 05:55 PM IST
ரூ.10 ஆயிரத்திற்காக 2 வயது சிறுமி கொடூர கொலை...  இந்தியா முழுவதும் கொந்தளிப்பு..!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் 2 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

உத்தரபிரதேசத்தில் 2 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு டுவிங்கிள் சர்மா எனும் 2 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 31-ம் தேதி டுவிங்கிள் திடீரென மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனையடுத்து குழந்தை முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கப்பட்டு கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இருவரும் குழந்தையை தாங்கள் கொன்றதாகவும் ஒப்புக் கொண்டனர். குழந்தையின் பெற்றோர் ஜாகித்திடம் பணம் வாங்கியுள்ளனர். அதனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இந்த குழந்தை கடத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த சிறுமி கொலைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்.

2 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மனித நேயமற்ற செயல். அதிர்ச்சி அளிக்கும் இச்சம்பவம் மன்னிக்க முடியாதது. கொலையாளிகளை சட்டத்தின் நிறுத்தி அந்த சிறுமிக்கு நீதி வழக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தமிழ் கண்ட குரல்களை எழுப்பி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!
பூமியின் எந்த மூலையிலும் இணையம்.. LVM3 ராக்கெட்டில் இமாலய சாதனை படைத்த இஸ்ரோ