Latest Videos

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா! பிரியங்கா போட்டியிடுவார் எனவும் அறிவிப்பு!

By SG BalanFirst Published Jun 17, 2024, 7:36 PM IST
Highlights

வயநாடு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளார்.

வயநாடு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வயநாடு மக்களுடன் தனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது என்றும் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு அடிக்கடி வருகை தருவேன் என்றும் கூறினார்.

ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புவதாகக் கூறிய அவர், பிரியங்கா காந்தியுடன் தன்னையும் சேர்த்து வயநாடுக்கு இரண்டு பிரதிநிதிகள் இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏர் இந்தியா விமானத்தில் அளிக்கப்பட்ட உணவில் பிளேடு! வாயில் போட்டு மென்று பார்த்த பயணி!

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் செய்தியாளர்கள் முன்பு பேசினார். அவர், ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் முதல் முறையாக தேர்தலில் களமிறங்குவார் என்று தெரிவித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதியில் இருந்து 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்யவேண்டும். அதன்படி, ராகுல் காந்தி ரேபரேலியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர அவர் முடிவு செய்துள்ளார்.

பிரியங்கா காந்திக்கும் கேரள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் ராகுல் காந்தியைப் போலவே அவரும் வயநாடு மக்கள் சார்பில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் கேரள அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிக்சட் டெபாசிட் வேண்டாமா? அதை விட பெஸ்டா போஸ்ட் ஆபீசில் நிறைய சாய்ஸ் இருக்கே! ட்ரை பண்ணி பாருங்க!

click me!