
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் விசாரணைக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார்.
ரூ.90 கோடி கடன்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.
ரூ.50 லட்சம்
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியி இருந்தனர். அந்த நோட்டீஸில் ஜூன் 2ம் தேதி ராகுல் காந்தி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரப்பட்டிருந்தது.
விசாரணைக்கு ஆஜர்
ஆனால், ராகுல் காந்தி அமலாக்கப்பிரிவுக்கு எழுதிய கடிதத்தில் வெளிநாட்டில் இருப்பதால், வரும் 5ம் தேதிக்கு மேல்தான் தாயகம் திரும்புவதால், அதன்பின் ஆஜராகிறேன். அதற்கு புதிய தேதியை அறிவிக்கும்படி கோரியிருந்தார்.
இதையடுத்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்து.
இதன்படி இன்று(13ம்தேதி) அமலாக்கப்பிரிவு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் ஆஜராகினார். உடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் சென்றார்.
போராட்டம்
ராகுல் காந்தி விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து காங்கிரஸ்தொண்டர்கள் அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன் ஏராளமானோர் திரண்டு இ்ன்று போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால், தொண்டர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நிருபர்களிடம் கூறுகையில் “ நாட்டில் என்ன நடக்கிறதோ அதை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். வன்முறையை தாங்கிக்கொள்ள முடியாது என்று பிரதமர் நாட்டுக்கு உறுதியளிக்க வேண்டும்”எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கேட்க வாய்ப்புள்ள 8 கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1. அசோசியேட் ஜர்னல் நாளேட்டில் உங்கள்(ராகுல்காந்தி) பங்கு, நிலை என்ன?
2. யங் இந்தியா லிமிடட் நிறுவனத்திலும் உங்கள் பங்கு, நிலை என்ன?
3. உங்கள் பெயரில் ஏன் பங்குகளை வைத்துள்ளீர்கள்?
4. பங்குதாரர்களுடன் இதற்கு முன்பு கூட்டம் ஏதும் நடத்தியுள்ளீர்களா?
5. யங் இந்தியா லிமிடட் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏன் கடன் கொடுக்க விரும்பியது?
6. நேஷனல் ஹெரால்டு நாளேட்டை மீண்டும் ஆரம்பிக்க காங்கிரஸ் கட்சிக்கு எண்ணம் ஏன் தோன்றியது?
7. காங்கிரஸ் கட்சி அளித்த கடன் குறித்த விவரங்கள் என்ன?
8. அசோசியேட் ஜர்னல் மற்றும் நேஷனல் ஹெரால்ட் சொத்துக்கள் குறித்த விவரங்கள் என்ன