naveen jindal: nupur sharma:நபிகள் மீது அவதூறு: இந்திய அரசு, தனியார் உள்பட 70 இணையதளங்களை முடக்கிய ஹேக்கர்கள்

By Pothy RajFirst Published Jun 13, 2022, 9:18 AM IST
Highlights

naveen jindal : nupur sharma : இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்காக பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் இருவருக்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பிவரும்நிலையில், அதற்குப்பதிலடியாக மத்திய அரசு மற்றும்தனியார் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்காக பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் இருவருக்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பிவரும்நிலையில், அதற்குப்பதிலடியாக மத்திய அரசு மற்றும்தனியார் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் மீது அவதூறாகப் பேசிதற்காக ஏற்கெனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தது. அதற்குள்ளாகவே, சைபர் தாக்குதலை இந்திய அரசு இணைதளங்கள் மீது நடத்தியுள்ளனர்.

டிராகன் ஃபோர்ஸ் மலேசியா எனும் ஹேக்கர்ஸ் குழு இந்தத்தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியத்தூதரகம், தேசிய வேளாண்மை மேம்பாட்டு விரிவாக்கப் பிரிவு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகிய மத்திய அரசு இணையதளங்களை முடக்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள 70 இணையதளங்களை இந்த ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர்.

இதில் சில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் இணையதளங்களும் அடக்கம். குறிப்பாக டெல்லி பப்ளிக் ஸ்கூல், பவன்ஸ், கல்லூரிகள், மகாராஷ்டிராவில் 50க்கும்மேற்பட்ட இணையதளங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

இந்த ஹேக்கர்கள் வெளியிட்ட ஆடியோவில், “உன்னுடையமதம் உனக்கு, என்னுடைய மதம் எனக்கு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஹேக்கர்கள், உலகம் முழுவதும் உள்ள ஹேக்கர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேலிலில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளத்தை சரிசெய்யும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்இன்னும் முழுமையாக இணையதளம் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதேபோல “1877” என்ற ஹேக்கர்ஸ் குழுவும், மகாராஷ்டிரா ஜூடிசியல் அகாடெமி இணையதளத்தையும் முடக்கியுள்ளது. அந்த ஹேக்கர்ஸ் பதிவிட்ட செய்தியில் “ இந்திய மக்களுடன் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. அவர்கள் அவர்களுக்கு பிடித்த மதத்தை தழுவ உரிமை இருக்கிறது. ஆனால், எங்கள் இஸ்லாம் மதத்தை தாக்க அனுமதிக்கமாட்டோம்”எ னத் தெரிவித்தார்

சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகையில் “ அரசியல்ரீதியாக ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி, டேட்டாக்களைஅழிக்க முயன்றுள்ளனர். ஆதலால் அனைத்து அரசு இணையதளங்களும் இனிமேல் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இஸ்ரேல் தூதரக இணையதளத்தை ஹேக்கிங் செய்து பாஸ்போர்ட் உள்ளிட்ட பலவிவரங்களை வெளியிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்

click me!