சும்மா இறங்கி அடித்த பாதுகாப்பு படையினர்.. கடந்த 24 மணிநேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Published : Jun 13, 2022, 08:43 AM IST
சும்மா இறங்கி அடித்த பாதுகாப்பு படையினர்.. கடந்த 24 மணிநேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமடைந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீவிரவாத தாக்குதலால் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்துது அரங்கேறி வருகிறது. இதனையடுத்து தீவிரவாததிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டு கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும்  லஷ்கர் -இ -தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமடைந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீவிரவாத தாக்குதலால் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்துது அரங்கேறி வருகிறது. இதனையடுத்து தீவிரவாததிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், புல்வாமா மாவட்டம் டிராம்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 3 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். சுட்டு கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த 24 மணிநேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 99 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!