குடியரசு தலைவர் தேர்தல் விவகாரம்... கட்சிகளுடன் பேச குழு அமைத்தது பாஜக!!

Published : Jun 12, 2022, 06:46 PM IST
குடியரசு தலைவர் தேர்தல் விவகாரம்... கட்சிகளுடன் பேச குழு அமைத்தது பாஜக!!

சுருக்கம்

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் பேச குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. 

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் பேச குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. குடியரசு தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த், பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவின் 14 வது குடியரசு தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு சட்டத்தின் 62வது பிரிவின்படி, பதவியில் இருக்கும் குடியரசு தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்தாக வேண்டும். அதன்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 15 தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 30 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜூலை 2 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஜூலை 21 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4 ஆயிரத்து 33 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேர் வாக்களிக்க இருப்பதாகவும், இவர்களின் ஓட்டு மதிப்பின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 என்றும், தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுமதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 231 ஆகும். எம்.பி.க்கள் ஓட்டுமதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 200 ஆகும். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற கூட்ட அரங்கங்களிலும் நடைபெறும். இவ்வாறு நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.வாக்குப்பதிவு நடைபெறும் குறிப்பிட்ட அறைகளையும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதன்படி தமிழகத்தில் சட்டசபையின் தரைத்தளத்தில் உள்ள கமிட்டி அறையில் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை செயலக அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல மாநிலங்களில் சட்டசபை செயலாளர் மற்றும் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன், இணைச்செயலாளர் ஆர்.சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தலின்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ராஜ்நாத்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு
நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி