
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்பதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சலத்தில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இதேபோல், ஹிமாச்சல் மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியை பிடித்தது.
இதைதொடர்ந்து குஜராத், இமாச்சல் வெற்றி மூலம் நல்லாட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தலை வணங்கி ஏற்கிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வின்றி மக்களுக்காக சேவை செய்வோம் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் குஜராத், இாமச்சல் வெற்றி என அமித்ஷா தெரிவித்துள்ளார். சாதிய அரசியலுக்கு எதிராக கிடைத்த வெற்றி எனவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்பதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சலத்தில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் எதிரொலியின் கோபத்தை தொண்டர்கள் நாகரீகத்துடன் எதிர்கொண்டுள்ளனர் எனவும் நாகரிகமும் அஞ்சாமையும் காங்கிரஸ் கட்சியின் பலம் என்பதை நிரூபித்து விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தன்மீது பாசத்தை பொழிந்த குஜராத், ஹிமாச்சல மக்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்.