
1990 லிருந்து குஜராத்தில் பாஜக வெற்றியை மட்டுமே சந்தித்து வருவதாகவும் சாதி அரசியலை மக்கள் புறக்கணித்து விட்டு வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளனர் எனவும் பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சியில் சாதனை படைத்தவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றியையும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது பா.ஜ.க 103 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 74 இடங்களை பிடித்திருந்தது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் வேண்டும்.
இந்த இலக்கை பா.ஜ.க கடும் போராட்டத்துக்குப் பிறகு எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பா.ஜ.க குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதேபொல் இமாச்சல் மாநிலத்திலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், 1990 லிருந்து குஜராத்தில் பாஜக வெற்றியை மட்டுமே சந்தித்து வருவதாகவும் சாதி அரசியலை மக்கள் புறக்கணித்து விட்டு வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளனர் எனவும் பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சியில் சாதனை படைத்தவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றியையும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.