
இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோகன் பாகவத், இந்துக்கள் யாரையும் பகைவர்களாக பார்ப்பதில்லை. அனைத்து தரப்பினரும் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். மக்களை ஒன்றிணைப்பதன் பெயரே இந்துத்துவா என பேசினார்.
இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக உருவாக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். உலகம் முழுதும் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் இந்துக்கள், இந்தியாவில் குறியேறுகிறார்கள். இந்துக்கள் உண்மையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உலகம் வலிமையின் மீது மரியாதை செலுத்துகிறது. நமது அமைப்பில் வலிமை இருக்கிறது. ஒரு அமைப்பாக செயல்படுவதுதான் இயற்கையின் சட்டம். இந்துக்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என மோகன் பாகவத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் என ஒரே போடாக போட்டார் மோகன் பாகவத்.