2019ல் கட்சித் தலைவர்; பிரதமர் வேட்பாளர் : அமெரிக்காவில் வாய் திறந்த ராகுல்!

Asianet News Tamil
Published : Sep 12, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
2019ல் கட்சித் தலைவர்; பிரதமர் வேட்பாளர் : அமெரிக்காவில் வாய் திறந்த ராகுல்!

சுருக்கம்

Rahul Gandhi address at UC Berkeley LIVE updates In Kashmir UPAs 9 years of work destroyed in 30 days by NDA

வரும் 2019ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவராக,  பிரதமர் வேட்பாளராக தான் தயார் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை இன்று கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில்  மக்கள் ஜனநாயகக் கட்சியை சிலாகித்துப் பேசிய ராகுல்,  பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் அரசு கடந்த 9 வருடங்கள் கடுமையாக முயற்சி செய்து காஷ்மீரில் ஏற்படுத்தி வைத்த அமைதியை பாஜக., அரசு 30 நாட்களில் சீரழித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தான் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவன் இல்லை என்றும், பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று. பயங்கரவாதத்துக்கு என் பாட்டியையும், தந்தையும் நான் இழந்திருக்கிறேன்,  என்னைவிட யார் வன்முறையை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் இன்று அமைதிக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகிறது என விமர்சனம் செய்த ராகுல், வெறுப்பு, கோபம் மற்றும் வன்முறை நம்மை அழித்துவிடும். காங்கிரஸ் கட்சியின் கொள்கை உரையாடல்கள் மூலம் நிகழ்த்தப்படுவது. திணிக்கப்படுவது இல்லை. பாஜக., அரசின்  உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு மட்டும்தான்” என்றார் ராகுல்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளாராக தாங்கள் தயாரா என ராகுலிடம் மாணவர் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளி ராகுல், “2019ல் அதைச்  செய்வதற்கு முழுதும் தயார். காங்கிரஸ் கட்சிதான் இதனை முடிவு செய்யவேண்டும், இதற்கான செயல்முறையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் முடிவு என்பது காங்கிரஸ் கட்சி எடுப்பதுதான்” எனக் கூறிய ராகுல், இது ஏதோ வாரிசு அரசியல் என்று மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும். ஆனால், வாரிசு அரசியல் எல்லா இடத்திலும் தான் உள்ளது. இந்த ராகுலைஇப்படிக் கை காட்டுபவர்கள், அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின், அனுராக் தாக்கூர்... அட அவ்வளவு ஏன்... திரையுலகில் இருக்கும் அபிஷேக் பச்சன் ஆகியோரைக் கூட மறந்துவிடுகின்றனர். இவர்கள் எல்லோருமே வாரிசு அரசியலில் வந்தவர்கள்தானே! ஒரே ஒரு விஷயம், 2012-ல் காங்கிரஸ் மக்களை நேரடியாக சந்திப்பதிலிருந்து விலகியதே  நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பேசினார் ராகுல்!

A speech marked by acuity & passion, & a discussion infused with candour & insight #RGinUS @UCBerkeley pic.twitter.com/z9tg4x7aM0

Ad3
— Shashi Tharoor (@ShashiTharoor) September 12, 2017
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8">

பிரதமர் மோடிக்கு பேச்சுத் திறமைதான் இருக்கிறது, ஆனால் குளறுபடியான ஜிஎஸ்டி, வேலை இழப்பை ஏற்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத தூய்மை இந்தியா திட்டம் எல்லாம்  மோடியின் திட்டங்கள்தான். காங்கிரஸ் ஆட்சியில் நாடு பெற்ற வளர்ச்சிக்கு நேர்மாறாக இப்போது மோடியின் ஆட்சியில் எல்லாம் நடக்கிறது.

இந்தியாவில் கருத்து சுதந்திரமும் அடியோடு பறிபோய்விட்டது. கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். முந்தைய ஆட்சியில் அனைவரிடமும் கருத்து கேட்டு ஆட்சி நடத்தப்பட்டது. எந்த ஒரு கொள்கைத் திணிப்பும் இல்லை. ஆனால் இப்போது கருத்து சொல்லவே பலரும் பயப்படும் நிலையில் நாடு உள்ளது என்று கூறினார் ராகுல்.

பாஜகவைச் சேர்ந்த ஆயிரம் பேர் கம்பியூட்டர் முன்னால் இருந்து கொண்டு என்னைக் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். நாட்டை வழிநடத்துபவர்தான் இந்த ஆயிரம் பேரையும் வழி நடத்தி வருகிறார் என்று மோடியை கடுமையாகச் சாடினார் ராகுல் காந்தி.

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?