
நாட்டில் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) 4 வகைகளாக இருக்கும் நிலையில், அதைமாற்றி ஒரு வகை அல்லது 2 வகையான வரி மட்டுமே விதிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அதாவது, நாடுமுழுவதும் அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் ஒரே வகையாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அல்லது 18 சதவீதம் மற்றும் 12 சதவீதம் என இரு வகையாக வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் மறைமுக வரிகள் நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி. வரி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 5, 12, 18, 28 என வகையான வரிகளை ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைத்தது. ஆனால், இந்த வரிகளில் ஏராளமான குளறுபடிகளும், பொருட்களுக்கு கூடுதல்வரிகளும் இருப்பதாகக் கூறி மாநிலங்கள் தொடர்ந்து வரி விலக்கு கோரி வருகின்றன.
இதையடுத்து, சமீபத்தில் ஐதராபாத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது, ஒவ்வொரு மாநில அரசுகள்சார்பிலும் பங்கேற்ற நிதிஅமைச்சர்கள், பிரதிநிதிகள், குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு வேண்டும், அல்லது வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
இந்த கோரிக்கை அனைத்தும் எந்த விதமுன்னறிவுப்பும் இல்லாமல் எழுப்பட்டது. இதனால், சமானிய மக்கள் அதிகமாக நுகரும் 40 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரியில் 4 வகையான வரிகள் இருப்பதால், அதிகமான விலக்குகள் மாநில அரசால் கோரப்பட்டு வருகின்றன. அதை 2 வகையாக அல்லது ஒரே வகையாக வரியை நிர்ணயம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்துவருகிறது.
அவ்வாறு இருவகையான வரியாக இருந்தால், 12 மற்றும் 18 சதவீதமும், ஒரே வகையாக இருந்தால் 18 சதவீதம் மட்டும் இருக்கும் எனத் தெரிகிறது.
ஏனென்றால், ஜி.எஸ்.டி. வரியில் வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 12 முதல் 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது பெரும்பாலானோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஒழுங்கற்ற ஜி.எஸ்.டி. என்று பொருளாதார வல்லுநர்களே தெரிவித்தனர்.
இதனால், தான் மாநில அரசுகள் ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் வரிவிலகு கோரியும், வரி குறைப்பு கோரியும் பேசி வருகின்றன. இதை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரி வகை மாற்றம் செய்யப்பட உள்ளது.