
குழந்தை கடத்தலைத் தடுத்தல், பாலியல் துன்புறுத்தலில் இருந்து காத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி வரையிலான 11 ஆயிரம் கி.மீ நடை யபணத்தை நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்தியார்த்தி இன்று தொடங்கினார்.
கன்னியாகுமரி விவேகானந்த நினைவு மண்டபத்தில் இருந்து இன்று தனது நடைபயணத்ைத தொடங்கிய சத்தியார்த்தி, அக்டோபர் 16-ந்தேதி டெல்லியில் நிறைவு செய்வார்.
கைலாஷ் சத்தியாரத்தி கடந்த 36 ஆண்டுகளாக குழந்தைகள் நலன், குழந்தைகள் கடத்தலைத் தடுத்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக போராடி வருகிறார். இவரின் சேவையை நினைவு கூர்ந்து கடந்த 2014ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் சத்தியார்த்தி தொடங்கும் முன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
இந்தியா என்பது புனிதர்கள், துறவிகள் வாழ்ந்த நாடு.இங்கு ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும், அது நாட்டுக்கே ஆபத்து. குழந்தைகள் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் என்பது, சமூகத்தின் ஒழுக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பேரழிவாகும், தொற்றுநோயாகும். நீண்ட காலத்துக்கு மவுனப் பார்வையாளர்களாக இருக்க முடியாது.
நமது மவும் கூடுதலான குழந்தைகளை பலிகொடுக்கும். அதனால், நாடுதழுவிய நடைபயணத்தையும், எந்த குழந்தையும், பாலியல் ரீதியாக தாக்கப்படக்கூடாது,பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்கி இருக்கிறேன்.
கன்னியாகுமரிக்கு எப்போதுமே என் மனதில்சிறப்பான இடம் உண்டு. இதற்கு முன் 2001-ல் நான் தொடங்கிய யாத்திரையும் இங்குதான் தொடங்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் 1893ம் ஆண்டு பேசிய அந்த நாளில் எனது நடைபயணம் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்