
காங்கிரஸ் துணை துணைத்தலைவர் ராகுல் காந்தி,கழிப்பறைக்கு செல்லும் போது தவறுதலாக பெண்கள் கழிவறை என்பதை பார்க்காமல் உள்நுழைந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது, குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், சுற்றுப்பயணம் மேற்கொண்டு மோடி அரசை பற்றி மக்களிடேயே பேசி வருகிறார்.
தொடர்ந்து பிஜேபி பற்றி கடுமையான விமர்சனத்தை வைக்கும் ராகுல்,பேசி முடித்த அதே வேகத்தில் டென்ஷனாக மேடையிலிருந்து கீழே இறங்கி செல்லும் போது தான் இந்த சிறிய தவறு நடந்தது.
அதாவது சோட்டா உதய்பூரில் பிரச்சாரம் செய்வதற்காக அங்கு சென்ற ராகுல், மோடி அரசாங்கத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். பின்னர், கூட்டம் முடிந்ததும், கழிவறைக்கு சென்றார்.ஆனால் தவறுதலாக பெண்கள் கழிவறைக்கு நுழைந்த ராகுலை பார்த்த அவருடைய பாதுகாவலர்கள் உடனடியாக ராகுலை நோக்கி ஓட,உஷாரான ராகுல், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்.
இதை பார்த்த மக்கள்..சொல்லவா வேண்டும்..எவ்வளவு ஊத வேண்டுமோ... அவ்வளவு ஊதிவிட்டார்கள்......