மோடி அரசுக்கு அடிக்கு மேல் அடி - ஐ.எம்.எப். அமைப்பும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்தது

First Published Oct 11, 2017, 9:57 PM IST
Highlights
The International Monetary Fund has been reporting on global economic growth.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையும், ஜி.எஸ்.டி. வரியும்தான் நாட்டின் பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்தது என்று சர்வதேச பண நிதியம்(ஐ.எம்.எப்.) அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6.8 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதம் குறைத்து 6.7 சதவீதமாக சர்வதேச பண நிதியம் மதிப்பிட்டுள்ளது.

மேலும், 2018ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், இது கடந்த ஜூலை மற்றும் ஏப்ரல் மாதத்தில் மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் 0.3 சதவீதம் குறைவாகும் என்றும் ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.

ஐ.எம்.எப்.

 உலக பொருளாதார வளர்ச்சி குறித்து ‘சர்வதேச பண நிதியம்’ அறிக்கைவௌியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

ஜி.எஸ்.டி. ரூபாய் நோட்டு தடை

இந்தியாவில் வளர்ச்சியின் வேகம் மந்தமடைந்து, குறைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாஜனதா அரசு கொண்டு வந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை திரும்பப்பெற்ற ரூபாய் நோட்டு நடவடிக்கையும், ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரியுமே காரணம்.

 இந்திய அரசு சார்பில் அடிப்படை கட்டமைப்புக்கு அதிகமாக செலவு செய்தால், புள்ளிவிவரங்களில் மாற்றம் அடைந்து, 7.1 சதவீதத்துக்கு உயரும்.

சீனாவைக் கூட்டிலும் குறையும்

அதேசமயம், 2017ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம், சீனாவுக்கும் குறைவாகவே இருக்கும். சீனாவின் வளர்ச்சி 6.8சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி 6.7சதவீதமாக குறைந்திருக்கும். அதேசமயம் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையும் நாடுகள் பட்டியலில் 2018ம் ஆண்டில் இந்தியா இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

தொழிலாளர் சந்தையை எளிமைப்படுத்துதல், நிலம் கையகப்படுத்தும் முறைகளில் தடைகளை நீக்குதல் ஆகியவை தொழில் செய்யும் சூழலை மேம்படுத்தும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!