ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தினால் ஏற்படும் நீண்ட கால பலன்களை விட குறுகியகால பாதிப்பு அதிகம் என மத்திய அரசை எச்சரித்திருந்ததாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தற்போது சிகாகோ பல்கலை பேராசிரியராக உள்ளார். அவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
undefined
இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது-
ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து எனது கருத்தை வாய்மொழியாக அரசிடம் கூறியிருந்தேன். இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என நினைத்தால், அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்திருந்தது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. ஆனால், எனது பதவி காலத்தில் இந்த திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்க கூறப்படவில்லை.
இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் நல்லது தான் இருந்தாலும், இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த நேரத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பொருளாதார வெற்றி என கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.