குர்பானி கொடுக்கும் முறையை இந்த நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளுமா இந்தியா?

By SG Balan  |  First Published Jul 3, 2023, 3:24 PM IST

சவூதி முதல் அமெரிக்கா வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் முஸ்லிம்கள் குர்பானி கொடுக்கும் நிகழ்வுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் செயல்படுகின்றன.


சவூதி அரேபியா முதல் அமெரிக்கா வரை உலகம் முழுவதும், ஈத் அல்-ஜுஹா எனப்படும் ஒரு மிருகத்தை பலியிடுட்டு 'குர்பானி' கொடுக்கும் முறை முஸ்லிம்களின் முக்கிய மதக் கடமை ஆகும். இருப்பினும், பெரும்பாலான நாடுகளில் இது சிறப்பு அனுமதிகள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்குள் முறையாக செய்யப்படுகிறது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் குர்பானிக்காக விலங்குகளை அறுப்பது ஒரு பிரத்யேகமான வளாகத்தில் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சுகாதரம் என்ற இஸ்லாத்தின் கொள்கை எந்த தயக்கமும் இல்லாமல் மீறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நாடுகளில் இஸ்லாமிய பண்டிகை நாளிலும் அதற்குப் பின்னரும், வடிகால்களில் ரத்தம் ஓடுவதும், தெருக்களில் சிதறிக் கிடக்கும் விலங்குகளின் எச்சங்கள், துண்டிக்கப்பட்ட தலைகள் மற்றும் தோல்கள் சிதறிக் கிடப்பதும் பார்க்க முடிகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறு குமட்டலைத் தூண்டும் துர்நாற்றம் வீசுவது பொதுவான காட்சியாகும்.

மணிப்பூரில் விடிய விடிய நடந்த சண்டை! 3 பேர் சுட்டுக்கொலை... ஒருவர் தலை துண்டிப்பு

மற்ற நாடுகளில் குர்பானி கொடுப்பது எப்படி?

இஸ்லாத்தின் கோட்டையான சவூதி அரேபியாவில், தனியார் இடங்களில் குர்பானி கொடுக்க அனுமதி இல்லை; அதற்கான பிரத்யேகமான இறைச்சி கூடங்களில் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும். சவூதி அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது.

இதேபோல அமெரிக்காவிலும், பதிவு செய்யப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே குர்பானி கொடுப்பது அனுமதிக்கப்படுகிறது. இங்கிலாந்தில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே குர்பானிக்காக விலங்குகளை வெட்ட முடியும்.

சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பக்ரீத் பண்டிகையின்போது விதிமுறைகளை அறிவிக்கின்றன. மண், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தமாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அபுதாபியில், இந்த விதியை மீறுவது கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். ஒரு வெளிநாட்டவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அவர் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வழிவகுக்கும்.

இந்தக் காரணங்களுக்காக, இஸ்லாமியர்களோ மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களோ பண்டிகை நாட்களில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் மாசு படுத்தும் செயலில் ஈடுபட விரும்புவதில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் இதில் முன்னுதாரணமாக உள்ளது. துபாயிலோ, அபுதாபியிலோ அல்லது ஷார்ஜாவிலோ இறைச்சிக் கூடத்தில் மட்டுமே கறிக்காக விலங்குகளை வெட்டலாம். இதுமட்டுமின்றி, ஒவ்வொரு விலங்கு சந்தையும் இறைச்சிக் கூடத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அபுதாபியில், குடியிருப்பு வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ விலங்குகளை அறுப்பது சட்டவிரோதமானது. மேலும் பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள்.

விளம்பரத்துக்கு எவ்ளோ செலவு பண்றீங்க... நிதி இல்லை என்ற டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

இந்தியாவில் என்ன செய்ய முடியும்?

இந்தியா போன்ற பன்முக கலாச்சார சமூகத்தில், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஆன்லைனில் குர்பானி கொடுக்கும் முறைக்கு சிலர் மாறியுள்ளனர். ஒருவர் ஆன்லைனில் பணம் செலுத்தினால் குர்பானி இறைச்சியை வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும்.

தர்கா அஜ்மீர் ஷெரீப்பின் பாதுகாவலரும், சிஷ்டி அறக்கட்டளையின் தலைவருமான ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி, குர்பானியை அறிவியல்பூர்வமாகவும், நாகரிகமாகவும் நடத்துவதற்கு ஆதரவாகப் பேசுகிறார். இருப்பினும், அவ்வாறு செய்வது எளிதான காரியமாக இருக்காது என்றும் அவர் கருதுகிறார்.

“இந்த அமைப்பு நடைமுறையில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. நான் துருக்கி முதல் மாலத்தீவு வரை குர்பானி கொடுக்கும் முறையைப் பார்த்திருக்கிறேன்; இவை தனிப்பட்ட முயற்சியின் விளைவு அல்ல, இது அரசாங்கத்தின் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது." என்று ஹாஜி சையத் குறிப்பிடுகிறார்.

மக்கள் நலனுக்காக பெண் முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ மேயர்

click me!