" ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு" : பஞ்சாப் அரசு அதிரடி..!!!

Asianet News Tamil  
Published : Nov 27, 2016, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
" ரூ.25 லட்சம்  ரொக்கப்பரிசு" : பஞ்சாப் அரசு அதிரடி..!!!

சுருக்கம்

நபா சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகளை பிடித்து தருபவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மாணம் அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே உள்ள நபா சிறையில் இன்று காலை 10 தீவிரவாதிகள் போலீஸ் உடையுடன் வந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த  காலிஸ்தான்  அமைப்பின் தலைவரான ஹர்மிந்தர் மிண்டு மற்றும் குர்பீத்சிங் உள்ளிட்ட 5 பேரை தப்பிக்க செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து இந்த சிறையிலிருந்து தப்பி ஓடியவர்களை பிடிக்க  போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறையின் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து அம்மாநில துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து, சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகளை பிடித்து தருபவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மாணம் அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Marriage : கணவனுக்கு தாலி கட்டிய மனைவி! இந்த வினோத திருமணத்தின் பின்னணி இதுதான்!
US Bond Yield: இந்திய பங்குச்சந்தைக்கு புது சிக்கல்! பின்னணியில் அமெரிக்க பத்திரங்களா?