
நவா சிறையில் புகுந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்க ஆயுதங்களுடன் வந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி தங்களின் முக்கிய கூட்டாளிகைள மீட்டு சென்றனர். இந்த சம்பவம் இம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே உள்ள நபா சிறையில் இன்று காலை 10 தீவிரவாதிகள் போலீஸ் உடையுடன் வந்து காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்மிந்தர் மிண்டு மற்றும் குர்பீத்சிங் உள்ளிட்ட 5 பேரை தப்பிக்க செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த சிறை உடைப்பு குறித்து பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதல் போலீசாருடன் அவசர ஆலோசனை நடத்தினர். தப்பியோடியவர்களை கைது செய்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் சிறையின் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டார்.