
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக அகாலிதளம் இணைந்து களத்தில் இறங்கின. ஆனாலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி இருந்த வந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி இம்மாநிலத்தில் முன்ணிலை பெற்றுள்ளது,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
117 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் முன்ணிலையில் உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி 8 இடங்கள் மட்டுமே முன்ணிலை பெற்றுள்ளன. எனவே பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றே தெரிகிறது.