"இனி பப்ளிக்கா தண்ணியடிச்சா ரூ.5000 அபராதம், 3 மாதம் சிறை" - குடிமகன்களே உஷார்..!!

 
Published : Oct 28, 2016, 05:45 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
"இனி பப்ளிக்கா தண்ணியடிச்சா ரூ.5000 அபராதம், 3 மாதம் சிறை" - குடிமகன்களே உஷார்..!!

சுருக்கம்

பொது இடங்களிலோ அல்லது மது கடைகளுக்கு அருகிலோ மது அருந்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், பொது இடங்களில் மது அருந்துவதற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இது தொடர்பாக பொது இடங்களில் மது அருந்த டெல்லி அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா, பொது இடங்களில் மது அருந்துவதற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறினார்.

மேலும், இது குறித்த விழிப்புணர்வு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறினார். அதே சமயத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புண்ரவு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்குப் பிறகு பொது இடங்களில் மது அருந்தினால், அவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அபராத விதிகளை மீறுவோறுக்கு தேவைப்பட்டால் ரூ.10,000 அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் மணீஸ் சிசோடியா கூறினார்.

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!