
மாவோயிஸ்டுகள் மீதான என்கவுன்டருக்கான பதிலை விரைவில் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிவிப்போம் என மாவோயிஸ்ட் அமைப்பின் பிரதிநிதியாக ஷியாம் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.
ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 27 மாவோஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான என்கவுன்டர் குறித்து பேசிய அந்த அமைப்பின் பிரதிநிதி ஷியாம், இதற்கான பதிலை விரைவில் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து, ஷியாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட என்கவுண்டருக்கான பதிலை விரைவில் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிவிப்போம். சந்திரபாபுவும், மகன் லோகேஷும் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது. சந்திரபாபு நாயுடு குடும்பத்தார் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம். அவர்கள் 24 மணி நேரமும், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் இவரை பாதுகாக்க முடியாது.
பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோரின் சரிதான் தற்போது நடந்துள்ள என்கவுன்டர். போலீஸ் கைது செய்துள்ள மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும். நடந்தது என்கவுன்டர் அல்ல... இது திட்டமிட்ட கொலை...
மக்கள் வரிப்பணத்தை கோடி கணக்கில் மோசடி செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. மாறாக மக்களுக்காக போராடும் எங்களை சுட்டுக்கொல்வதா?
இவ்வாறு அந்த தொலைக்காட்சி பேட்டியில் ஷியாம் கூறியுள்ளார்.