சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினால் தண்டனை நிச்சயம்! மத்திய அரசு ஆலோசனை!

 
Published : Jun 11, 2018, 04:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினால் தண்டனை நிச்சயம்! மத்திய அரசு ஆலோசனை!

சுருக்கம்

Punishment by spreading rumors in social media

சமூக ஊடகங்களில் இனி வதந்திகளைப் பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது பற்றி மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

அண்மைக் காலமாக குழந்தைகள் கடத்தல் வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், சில அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.

காஷ்மீரில் தீவிரவாதம், கல்வீச்சு சம்பவங்களுக்கு இத்தகைய விஷமச் செய்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும செய்திகளை அழிப்பது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான உயர்நிலைக்குப இன்று ஆலோசனை நடத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் விஷம செய்திகளைப் பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்தல், சமூக இணையதள சேவை வழங்கும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற
நிறுவனங்களுடன் விஷமச் செய்திகளை தடுப்பு மற்றும் அழிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!