பிச்சைக்கார பாகிஸ்தானே….. எங்ககிட்டயா மோதுற….பழிக்குப் பழி வாங்காம விட மாட்டோம்!! மோடி ஆவேசம் !!

By Selvanayagam PFirst Published Feb 16, 2019, 6:10 AM IST
Highlights

தேவையில்லாமல் தேன் கூட்டின் மீது கை வச்சுட்டீங்க… இனி எங்கள் ராணுவம் உங்களை சும்மா விடாது… புல்வாமா தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்காமல் விட மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.
 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 வீரர்கள் பலியான நிலையில், டெல்லியில் 'வந்தே பாரத்' என்ற பெயரில் இயக்கப்படும், புதிய ரயிலை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது எப்போதும் இல்லாத அளவுக்கு மோடி மிகக் கடுமையாக பேசினார்

நமது பாதுகாப்பு படையினரின் வீர தீரத்தை நாடு பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளது. அவர்களின் துணிச்சல் மற்றும் தீரத்தில் சந்தேகப்படும் ஒருவர்கூட இந்த நாட்டில் இருக்க முடியாது.

பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். உலகின் மிகப்பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எனக்கு பல நாடுகளின் தலைவர்களிடம் இருந்து வந்துள்ள இரங்கல் செய்திகளின் மூலம் அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் மட்டும் கொள்ளவில்லை. கடுமையான கோபத்திலும் உள்ளனர். பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டியே தீர வேண்டும் என்பதற்கு அவர்கள் அனைவருமே ஆதரவாக இருக்கின்றனர்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது’ என பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர தாக்குதலால், நாட்டு மக்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளோரை தண்டிக்காமல் விட மாட்டோம். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில், பாதுகாப்பு படைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நம் அண்டை நாடு, பயங்கரவாத தாக்குதல்களால் நம்மை நிலைகுலையச் செய்துவிட முடியும் என, நினைக்கிறது. அதன் திட்டம் நிறைவேறாது என ஆவேசமாக தெரிவித்தார்..

click me!