Ration Card: இலவச அரிசி பெறவில்லை என்றால் ரேஷன் அட்டைகள் ரத்து.. அரசு அதிரடி அறிவிப்பு.!

Published : Mar 04, 2022, 06:19 AM IST
Ration Card: இலவச அரிசி பெறவில்லை என்றால் ரேஷன் அட்டைகள் ரத்து.. அரசு அதிரடி அறிவிப்பு.!

சுருக்கம்

ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகளை வசதியானவர்கள் வைத்துள்ளதாக புகார்கள் அதிகளவில் உள்ளன. பல ஏழைகள் சிவப்பு அட்டை கிடைக்காமல் மஞ்சள் நிற அட்டைகள் வைத்துள்ளனர். இதை கணக்கெடுப்பு நடத்த பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதை செயல்படுத்தவில்லை.

இலவச அரிசி பெறாத அட்டைகளை ரத்து செய்யப்போவதாக புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகளை வசதியானவர்கள் வைத்துள்ளதாக புகார்கள் அதிகளவில் உள்ளன. பல ஏழைகள் சிவப்பு அட்டை கிடைக்காமல் மஞ்சள் நிற அட்டைகள் வைத்துள்ளனர். இதை கணக்கெடுப்பு நடத்த பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதை செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏழைகளுக்காக இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு முழுமையாக பூர்த்தியாகவில்லை. சிவப்பு அட்டை பல்வேறு சலுகையை பெறும் வசதியானோர் இலவச அரிசியை மட்டும் வாங்கவில்லை. இந்நிலையில், இலவச அரிசி பெறாத சிவப்பு ரேஷன் அட்டைகளை ரத்து செய்யப்போவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு அனைத்து சிவப்பு அட்டைத்தாரர்களுக்கும் குடும்ப அட்டையிலுள்ள நபர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ வீதம் இலவசமாக அனைத்து பகுதிகளிலும் தரப்படவுள்ளது. இந்த இலவச அரிசியை வரும் 20ம் தேதிக்குள் பெறவேண்டும். இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!