
Operation Ganga: உக்ரைனில் ஒருவாரமாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை. இன்று 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.இதற்கிடையே உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தப் போர் ஆரம்பித்தது முதலே ஒட்டுமொத்த உக்ரைன் வான்வழியும் மூடப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தாய்நாட்டுக்கு திரும்புவோர், பிற நாடுகளில் தஞ்சமடைய விரும்பும் உக்ரைன் மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. இந்த மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிக்கு அப்ரேஷன் கங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்களின் பாதுக்காப்பு மற்றும் மீட்பு பணியை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சீங் புரி, ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியில் தனியார் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இணைந்துள்ளன.இந்திய விமானபடையின் பி 17 விமானமும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் கங்கா மூலம் இன்று மட்டும் 3,726 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர். புக்காரெஸ்ட்டில் இருந்து 8 விமானம், சுசிவாவில் இருந்து 2, கோசிஸில் இருந்து ஒன்று, புதாபெஸ்டில் இருந்து 5, ரிசோவில் இருந்து 3 என மொத்தம் 19 விமானங்கள் இந்தியா வரவுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இண்டிகோ விமானம் மூலம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களுடன் மத்திய அமைச்சர் ராஜுவ் சந்திரசேகர் பேசினார். மேலும் உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தலின் பேரில், மாணவர்கள் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தில் பத்திரமாக சேர்க்கப்படுவர் என்று தெரிவித்தார். மேலும் அமைச்சர் ராஜீவ் காந்தி யுடன் இணைந்து தாயகம் திரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் “ஜெய்ஹிந்த்” என்று முழுக்கமிட்டனர்.
"