புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக கமலக்கண்ணன் இருந்து வந்தார். இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளை நிலங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனியார் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளார். அப்பொழுது நெல் மூட்டை இறக்குவதற்கு பணியாளர்கள் குறைவாக இருந்ததால் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை தானே முன்வந்து டிராக்டரில் இருந்து இறக்கி நெல் கொள்முதல் நிலையத்தில் இறக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுவையில் கடந்த 20216-21 வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கமலகண்னன் வேளான் துறை அமைச்சராக இருந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த கமல கண்ணன் அமைச்சராக இருந்த போதே தனது வயலில் உழுதல், விதை தெளித்தல், களையெடுத்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார். அவ்வப்போது கமல கண்ணனின் விவசாய பணிகள் தொடர்பான வீடியோக்கள் 2021-ம் ஆண்டே இணையத்தில் வைரலானது.
WhatsApp : அதை செய்ய சொன்னால் இந்தியாவில் வாட்ஸ் அப் சேவைகள் கிடைக்காது.. நிறுவனம் எச்சரிக்கை..
அப்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி இருந்தார். ஆளுங்கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த கிரண்பேடி, கமல் கண்ணனின் வயிலில் இறங்கி விவசாய வேலை பார்த்தை பாராட்டி இருந்தார்.
அதே போல் கமல கண்ணன் ஒருமுறை காரில் சென்ற போது, திடீரென சாலையோரங்களில் இறங்கி, மழை நீரால் அடைபட்டு கிடந்த சாக்கடைகளை எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் கையாலே சுத்தம் செய்தார். முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சாதாரண வேலைகளை எந்த வித கூச்சமும் இன்றி செய்து வருவதே அவரின் வாடிக்கை.
இந்த சூழலில் தான் முன்னாள் அமைச்சர் கமல கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வியப்புடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.