PSLV Launch: pslv-c54 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது! 8 நானோ, பூடானுடன் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிறது

By Pothy Raj  |  First Published Nov 25, 2022, 3:35 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) சார்பில் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில்  பாய்கிறது


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) சார்பில் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில்  பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவாண் விண்வெளி நிலையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை (நவம்பர் 26)காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

பிரிட்டனின் ஆசியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவிக்கு முதல்முறையாக இடம்

இந்தியா- பூடான் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக்கோள் உள்ளிட்ட 8 சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.  பூடான் செயற்கைக்கோளுக்கு ஆனந்த் என பெயரிடப்பட்டுள்ளது.மற்ற நானோ செயற்கைக்கோள்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள துருவா ஏர்ஸ்பேஸ் நிறுவனம் மூலம் தயாரி்க்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி திம்புவுக்கு பயணம் மேற்கொண்டபோது பூடான் –இந்தியா இடையே செயற்கைக்கோள் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் கையப்பமானது. அதன்படி கடந்த 2021, செப்டம்பரில் பூட்டானுடன் சேர்ந்து ஒரு செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜூலை-செப்டம்பரில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதமாகக் குறைந்தது: என்எஸ்ஓ அறிக்கை

இப்போது பூடான் பொறியாளர்கள் தயாரித்த 30 செமீ அளவுள்ள கியூபிக் சாட்டிலை, வானிலிருந்து பூடானை படம் பிடித்து அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தினசரி 3 முதல் 4 முறை பூடானை படம்பிடித்து அனுப்பும். ஏற்கெனவே பூடான் அரசு பூடான்-1 என்ற கல்வி தொடர்பான செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அனுப்பும் ஓசன்சாட் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்கும், நீர்வளங்களைக் கண்காணிக்கவும் செலுத்தப்படுகிறது. இந்த ஓசன்சாட்-3 960கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள், 1360வாட்ஸில் இயங்கக்கூடியது. இந்த செயற்கைக்கோள் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அதாவது பூமியிலிருந்து 723 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் கடலின் வெப்பநிலை, அதிவிரைவான புள்ளிவிவர சேகரித்தல் போன்றவற்றை செய்ய முடியும்
கடந்த 1999ம் ஆண்டு இந்தியா போலார் சன் சிங்ரோனஸ் ஆர்பிட் வகை ஓசன்சாட் செயற்கைக்கோளை அனுப்பியது. இந்த செயற்கைக்கோளில் ஓசன் கலர் மானிட்டர், மல்டி ப்ரீகுவென்சி ஸ்கேனிங் மைக்ரோவேவ் ரேடியோமீட்டர் உள்ளன. இந்த செயற்கைக்கோள் 11ஆண்டுகள் வரை செயல்பட்டு 2010ம் ஆண்டு செயலிழந்தது.

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பதவி பறிப்பா? அவசரமாக டெல்லிக்கு அழைப்பு: காரணம் என்ன?

இஸ்ரோ அனுப்பும் 84வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டில் அனுப்பும் 5வது ராக்கெட் ஆகும். இஓஎஸ்-06 மிஷன் என்பது, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பும் 56வது முயற்சியாகும், இந்த ஆண்டின் 3வது முயற்சியாகும். 

click me!