வரலாற்று திரிபுகளில் இருந்து வரலாற்றை மாற்றி எழுதுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: அமைச்சர் அமித்ஷா!!

By Dhanalakshmi GFirst Published Nov 25, 2022, 3:12 PM IST
Highlights

வரலாற்று திரிபுகளை விடுவிப்பதற்காக வரலாற்றை மாற்றி எழுதுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். தாய்நாட்டிற்காக போராடிய 30 சிறந்த இந்திய பேரரசர்கள் மற்றும் 300 தியாகிகள் குறித்த வரலாற்றை எழுதுமாறு கல்வியாளர்களையும் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.  

இன்றைய அசாம் பகுதியை ஆட்சி செய்த அஹோம் மன்னரின் கீழ் ராணுவ கமாண்டராக வீர் லச்சித் பர்புகானின் 400வது பிறந்த நாள் டெல்லியில் மூன்று நாட்கள் நடந்தது. இன்றைய இறுதி நாள் விழாவில் உள்துறை அமித்ஷா பேசுகையில், ''வீர் லச்சித் பர்புகான் இல்லையென்றால், வடகிழக்குப் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்காது. வீர் லச்சித் பர்புகான் வடகிழக்கு இந்தியாவை மட்டுமல்ல, முழு தென்கிழக்கு ஆசியாவையும் ஔரங்கசீப்பிடம் இருந்து பாதுகாத்தார். லச்சித் பர்புகானின் வாழ்க்கை மற்றும் காலங்கள் குறித்த இலக்கியப் படைப்புகளை இந்தி உட்பட 10 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். (விழாவில் கலந்து கொண்ட  அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் கேட்டுக் கொண்டார்).

"நமது வரலாறு திரிக்கப்பட்டதாகவும், சிதைக்கப்பட்டதாகவும் எனக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதை இப்போது சரி செய்ய விடாமல் தடுப்பது யார்? இப்போது உண்மையான வரலாற்றை எழுத விடாமல் தடுப்பது யார்?

மகாராஷ்டிரா கர்நாடகா இடையே தொடரும் எல்லைப் பிரச்சனையும், காரணங்களும்!!

இதைச் செய்தால், இந்தியாவின் உண்மையான வரலாறு நிலைநாட்டப்பட்டு, பொய்கள் தன்னிச்சையாக மறைந்துவிடும். நாட்டின் பெருமையை உயர்த்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கும் ஒரு அரசாங்கம் தான் மத்தியில் உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை மீட்டெடுக்க நாங்கள் பாடுபடுவோம். கடந்த கால வரலாற்றின் ஹீரோக்களை கொண்டாடாத  ஒரு தேசம் ஒருபோதும் தனக்கென ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியாது. சிறந்த குடிமக்களையும் உருவாக்க முடியாது. 

பர்புகானுக்கும் அவரது படைவீரர்களுக்கும் இருந்த தேசப் பற்றும், நாட்டுக்கான அர்ப்பணிப்பும் மொகலாய  ராணுவத்தில் இல்லை. இது தேசபக்தியால் பெற்ற வெற்றி. அவர்கள் வெற்றி பெற்று அஹோம் மன்னர்களின்  இறையாண்மை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தனர். இது மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவையும் ஔரங்கசீப்பிடமிருந்து மீட்டனர்.

Unemployment Rate in India: ஜூலை-செப்டம்பரில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதமாகக் குறைந்தது: என்எஸ்ஓ அறிக்கை

அந்த கால கட்டங்களில் அசாமில் லச்சித் பர்புகான் இல்லாவிட்டால், அசாமும் வடகிழக்கு இந்தியாவும் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியிருக்க முடியாது. லச்சித் பர்புகானின் 400 வது பிறந்தநாள் இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்துகிறது. அசாம் பகுதியை ஆட்சி செய்தவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் முஸ்லீம் படையெடுப்பாளர்களை தோற்கடித்து தங்கள் தாய்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தனர் என்று அமித்ஷா பேசினார்.

click me!