19 செயற்கைகோள்களுடன்... கனலைக் கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 28, 2021, 10:57 AM IST
Highlights

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சரியாக இன்று காலை 10.24 மணிக்கு நெருப்பைக் கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பிரேசிலின் அமேசானியா, இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட்,  சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோவை சக்தி தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சரியாக இன்று காலை 10.24 மணிக்கு நெருப்பைக் கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுன்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இன்று 59 ஆவது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தியுள்ளது. 

இதில் அமெரிக்காவிற்கு சொந்தமான 13 நானோ செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தி வடிவமைக்கப்பட்ட அமேசானியா செயற்கைக் கோள் 637 கிலோ எடையுள்ளது. அதன் ஆயுள் காலம் 4 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!