அசாமிற்கு மார்ச் 27ல் தேர்தல்... மூன்று கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 26, 2021, 5:52 PM IST
Highlights

அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தேதிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து வருகிறார். 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பதற்றத்துக்குரிய வாக்குப்பதிவு மையங்கள், பாதுகாப்பு வசதிகள், வாக்காளர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநிலத் தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவிட்டனர். இதன் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் ஏப்ரல் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 10ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 9ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!