இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் !! தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கை கோளும் ஏவப்படுகிறது…

First Published Jun 23, 2017, 7:33 AM IST
Highlights
PSLV - C 38


கார்ட்டோசாட்-2 மற்றும் 14 நாடுகளில் இருந்து 29 வெளிநாட்டு செயற்கைக்கோள், ஒரு தமிழக நானோ செயற்கைக்கோள் என 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட் இன்று  காலை 9.29க்கு ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்கிறது.*

சி-38 ராக்கெட் மூலம், கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் வான்வழி போக்குவரத்து, கடல் போக்குவரத்து உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.*

வர்த்தக ரீதியாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லத்வியா, லூதியானா, ஸ்லோவாகியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 29 நானோ வகை செயற்கைக்கோள்களும், தமிழகத்தில் கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு நானோ செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது.*

ராக்கெட் புறப்பட்ட 23 வது நிமிடம் 18வது நொடியில், 31 செயற்கைகோள்களும் அதன் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்படும்.*

இன்று  விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களில் கார்டோசாட்-2 தான் முதன்மை செயற்கைக்கோளாகும். இதன் எடை 712 கிலோ. இதில் 986 வாட்ஸ் கொண்ட அதிநவீன சோலார் பேனல்கள் உள்பட பல்வேறு நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

 

click me!